ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க கூட்டம்

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க கூட்டம் நடந்தது

Update: 2023-07-16 18:45 GMT

இளையான்குடி

முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் குறைகள் கேட்டல் கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் சாலைக்கிராமம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க தலைவர் இருதயராஜ், சங்க செயலர் சுகுமாறன், பொருளாளர் ராமசாமி, சட்ட ஆலோசகர் ஜான் சேவியர் ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில் சங்க உறுப்பினர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. மேலும் காமராஜரின் நினைவை போற்றும் வகையில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்