தூய்மை பணியாளர்களுக்கு மலர் கிரீடம் அணிவித்து மரியாதை

கூடலூர் அருகே தூய்மை பணியாளர்களுக்கு மலர் கிரீடம் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Update: 2022-09-14 15:36 GMT

கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தூய்மை தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்களின் பணிகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.

பின்னர் குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் சிவாஜி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். முன்னாள் தலைமை ஆசிரியர் அமுதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தூய்மை பணியாளருக்கு மலர் கிரீடம் அணிவித்தும், பரிசுகளை வழங்கியும் கவுரவித்தார்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் கூறுகையில், கொரோனா காலத்தில் உயிர் காக்கும் ராணுவமாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களின் வேலைக்கான அங்கீகாரத்தையும், பெருமதிப்பையும் நினைவுபடுத்தும் வகையில் மாணவர்கள் முன்னிலையில் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்