பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த தீர்மானம்

பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.;

Update: 2023-10-11 17:56 GMT

பெரம்பலூர் வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் வட்டார சுகாதார பேரவை பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை நடந்தது. இதில் பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி அறிவழகன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சூர்யகுமார், வட்டார ஊட்டச்சத்து அலுவலர் பிரேமா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜமோகன், சமுதாய சுகாதார செவிலியர் சுகுணா ராணி மற்றும் கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரவையில் பெரம்பலூர் வட்டாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார மையங்களின் சேவைகளை மேம்படுத்த தேவையான வசதிகள் குறித்தும், சுகாதாரத்துறையின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைய உதவ வேண்டியும், கிராமப்புற தூய்மை மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்தவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்