மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் தீர்மானம்

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விழுப்புரம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-07-07 15:38 GMT

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்ட 3-வது மாநாட்டையொட்டி விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன், மாநில துணைத்தலைவர் பாரதி அன்னா, மாநில செயலாளர் ஜீவா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமும், கடும் ஊனத்திற்கு ரூ.5 ஆயிரமும் என உயர்த்தி வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் புதிய உரிமை சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள், வங்கி கடன் வசதியை உடனுக்குடன் வழங்க வேண்டும், நலவாரிய பலன்களை ஊழலின்றி வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் முழுமையாக வேலை, முழு தினக்கூலி, வேலை நேரம் 4 மணி நேரம் ஆகியவற்றை அரசாணை மற்றும் ஊரக உள்ளாட்சி துறையில் மாநில இயக்குனரக வழிகாட்டுதலின்படி தளர்வின்றி செயல்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் கண்ணப்பன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட பொருளாளர் உமா, நிர்வாகிகள் முத்துவேல், முருகன், ஜெயக்குமார், ராஜீவ்காந்தி, செல்வி, யுகந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்