தீர்மானம்
குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றிய மாநாடு கீழையூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் பர்ணபாஸ் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் சம்பந்தம், மாநில குழு உறுப்பினர் செல்வம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் ஆகியோர் பேசினர். மாநாட்டில், தண்ணீர் இன்றி குறுவை பயிர் கருகி வருகிறது. எனவே குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஹாஜா அலாவுதீன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.