உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீன் கடைகளில் ஆய்வு

தர்மபுரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீன் கடைகளில் ஆய்வு செய்தனர்.

Update: 2023-04-23 18:45 GMT

தர்மபுரி நகரில் உள்ள மீன் கடைகளில் தரமற்ற மீன்கள் விற்பனை செய்வதாக மாவட்ட கலெக்டருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதன் அடிப்படையில் கலெக்டர் சாந்தி உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா தலைமையில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் உள்ளிட்ட குழுவினர் நகரில் உள்ள மீன் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். தர்மபுரி நகராட்சி மீன் மார்க்கெட் பகுதி, சந்தைபேட்டை மற்றும் பென்னாகரம் மேம்பாலம் பகுதியில் உள்ள மீன் இறைச்சி விற்பனை கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் ஒரு சில கடைகளில் இருந்து தரமற்ற அழுகிய மீன்கள் 15 கிலோ பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் 3 விற்பனையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் விதம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தரமான மீன்களை பொது மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என விற்பனையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்