கிணற்றில் தத்தளித்த ஆடு மீட்பு

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்த ஆடு பத்திரமாக மீட்க்கப்பட்டது.;

Update: 2023-08-08 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே கருவேலம்பாடு கிராமத்தில் ராகுல் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. நேற்று இந்த தோட்டத்திலுள்ள கிணற்றில் ஆடு ஒன்று தவறி விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கிணற்று தண்ணீரில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டை பாதுகாப்பாக மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்