பத்துகாணியில் கிணற்றில் விழுந்த நாய் மீட்பு
பத்துகாணியில் கிணற்றில் விழுந்த நாய் மீட்கப்பட்டது.;
அருமனை:
அருமனை அருகே உள்ள பத்துகாணி நிரப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவர் தனது வீட்டில் ஒரு நாய் வளர்த்து வருகிறார். அந்த நாய் வீட்டின் அருகில் உள்ள திறந்தவெளி கிணற்றில் தவறி விழுந்தது. இதனால் அது உயிருக்கு போராடிய நிலையில் சத்தம் போட்ட வண்ணம் இருந்தது. இதுகுறித்து குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி நாயை உயிருடன் மீட்டனர். நாய் மயக்கமான நிலையில் இருந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டது.