பெரியமேட்டில் உள்ள லாட்ஜில் விபசாரம் நடத்திய 3 இளம்பெண்கள் மீட்பு

சினிமா ஆசையால் சென்னைக்கு வந்து மோசம் போய் விபசார தொழிலில் ஈடுபட்ட 3 இளம்பெண்களை போலீசார் மீட்டனர்.;

Update: 2023-08-09 13:44 GMT

சென்னை,

சென்னை பெரியமேடு வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் விபசாரம் நடப்பதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று இரவு அந்த லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது, அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது.

2 அறைகளில் வாடிக்கையாளர்களுடன் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்த வெளிமாநிலங்களை சேர்ந்த 3 இளம்பெண்களை போலீசார் மீட்டனர். அவர்கள் சினிமா ஆசையால் சென்னைக்கு வந்து தரகர்களிடம் சிக்கி மோசம் போனவர்கள் ஆவார்கள். வேறு வழியில்லாமல் விபசார தொழிலில் ஈடுபட்டனர்.

அந்த இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளியதாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரபல தரகர் ஜப்பார் பூரி (31) என்பவர் கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட இளம்பெண்கள் 3 பேரும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்