நாகர்கோவிலில் குழந்தை தொழிலாளர்கள் 3 பேர் மீட்பு

நாகர்கோவிலில் குழந்தை தொழிலாளர்கள் 3 பேர் மீட்கப்பட்டனர்.

Update: 2022-06-14 20:59 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் குழந்தை தொழிலாளர்கள் 3 பேர் மீட்கப்பட்டனர்.

குழந்தை தொழிலாளர்கள்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி சம்பவத்தன்று தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் சஜின், உதவி ஆணையர் மணிகண்டபிரபு, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ஷகிலாபானு உள்ளிட்டோர் இணைந்து நாகர்கோவில் கோணம் பகுதியில் உள்ள ஒரு மீன்வலை உற்பத்தி தொழிற்சாலையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 13 வயதுக்கு உட்பட்ட 3 சிறுமிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 3 சிறுமிகளையும் அதிகாரிகள் மீட்டு நாகர்கோவில் பறக்கிங்கால் பகுதியில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்தனர். இந்த சிறுமிகளில் 2 பேர் நெல்லை மாவட்டத்தையும், ஒரு சிறுமி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய மீன்வலைத் தொழிற்சாலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சிறுமிகள் 3 பேரையும் பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்