4 இடங்களில் காய்கறி சந்தை தொடங்க கோரிக்கை
சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் ஏற்பட்டு வரும் இடநெருக்கடிகளை தவிர்க்க 4 இடங்களில் புதிய காய்கறி மார்க்கெட் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.;
சிவகாசி,
சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் ஏற்பட்டு வரும் இடநெருக்கடிகளை தவிர்க்க 4 இடங்களில் புதிய காய்கறி மார்க்கெட் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாநகராட்சி
சிவகாசியின் மையப்பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் 150 கடைகள் இயங்கி வருகிறது. மேலும் சிலர் அனுமதியின்றி நடைபாதைகளிலும் தற்காலிக காய்கறிகடைகளை நடத்தி வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் காய்கறி மார்க்கெட்டுக்குள் எளிதில் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மார்க்கெட்டுக்கு சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் காய்கறிகளை வாங்கி செல்ல சிறுவியாபாரிகளும், பொதுமக்களும் வந்து செல்கிறார்கள். இதனால் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்படுகிறது. அதே நேரத்தில் காய்கறிகளை வாங்க 7 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தும் பொதுமக்களும், வியாபாரிகளும் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
புதிய கடைகள்
இதனை தவிர்க்க சிவகாசியை சுற்றி உள்ள விஸ்வநத்தம், ரிசர்வ்லைன், திருத்தங்கல், பள்ளப்பட்டி ஆகிய இடங்களில் மாநகராட்சி சார்பில் புதிய காய்கறி மார்க்கெட் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். அவ்வாறு அமைத்தால் பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று காய்கறி வாங்க வேண்டிய நிலை ஏற்படாது.
மேலும் நகரப்பகுதியில் தற்போது ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலும் குறையும். எனவே மாநகராட்சி அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் காய்கறி மார்க்கெட் அமைக்க தேவையான இடம் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து பின்னர் காய்கறி மார்க்கெட் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்னர்.