தலைக்காய சிகிச்சை பிரிவு தொடங்க கோரிக்கை

வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் தலைக்காய சிகிச்சை பிரிவு தொடங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2023-07-05 21:01 GMT

வாடிப்பட்டி, 

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க வாடிப்பட்டி வட்டக்கிளை பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டக்கிளைதலைவர் மணி தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அசோக்குமார், மாவட்ட இணைச்செயலாளர் பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டக்கிளை துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் வட்டக்கிளைசெயலாளர் வேல்மயில் அறிக்கை வாசித்தார். வட்டக்கிளைபொருளாளர் பாண்டியம்மாள் நிதிநிலைஅறிக்கை வாசித்தார். வட்டஇணைச்செயலாளர்கள் ஆறுமுகம், சுந்தரலட்சுமி ஆகியோர் தீர்மானங்களை வாசித்தனர். மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்டபொருளாளர் ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்கவேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும். காசில்லா மருத்துவ சிகிச்சையை உறுதிபடுத்த வேண்டும். வாடிப்பட்டி தாலுகாவில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி அமைக்கவேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளில் உயிர்காக்க வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் தலைக்காய சிகிச்சை பிரிவினை தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் செயற்குழு உறுப்பினர் சுந்தர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்