போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுகோள்

போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-05-13 18:26 GMT

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பென்சனர் நலச்சங்கத்தின் பெரம்பலூர் கிளையின் மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் கிளை தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். பொருளாளா் சூரியகுமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில தலைவர் மருதமுத்து கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். 14-வது ஊதிய ஒப்பந்தத்தில் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் பிரச்சினைகளை பேசாமல் புறக்கணித்ததால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஓய்வூதியர்களின் பிரச்சினைகளை அரசு உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும். 2015-ல் இருந்து ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவ திட்டத்தை முதல்-அமைச்சர் காப்பீடு திட்டமாக வழங்க வேண்டும். வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பலன்களை ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்