அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கழிவறை அமைக்க கோரிக்கை
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கழிவறை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் சூலக்கரையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்தநிலையில் பயிற்சி நிலைய வளாகத்தில் 3 கழிவறைகள் மட்டுமே உள்ள நிலையில் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அந்த 3 கழிவறைகளுக்கும் தேவையான தண்ணீர் வசதியும் செய்யப்படவில்லை. இதனால் மாணவர்கள் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கும், திறந்த வெளிக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே தொழிற்பயிற்சி நிலைய நிர்வாகம் போதுமான கழிவறை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.