வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க கோரிக்கை
வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சம்பங்கி பூ கிழங்கு வழியாக பயிர் செய்து சுமார் 5 ஆண்டுகள் வரை பயிரை மாற்றாமல் பயிர் செய்யப்படுகிறது. அதாவது சம்பங்கி பூ இரவு நேரத்தில் மட்டுமே செடியில் இருந்து பறிக்கக்கூடிய பூவாக உள்ளது. பொழுது விடிந்த பிறகு பறித்தால் பூ மலர்ந்து விடும். பிறகு அதனை சந்தையில் விற்பது கடினம். மேலும் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் விவசாயிகள் பலர் பூக்களை பயிர் செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறோம். அதிகமாக பூ விளையும் சமயங்களில் குறைந்த விலைக்கு மட்டுமே வாங்குகின்றனர். மேலும் பூக்கள் வாங்காமல் சில சமயங்களில் திருப்பி அனுப்புகிறார்கள். எனவே வேப்பந்தட்டை தாலுக்கா பகுதியில் வாசனை திரவியங்கள் தயாரிக்க கூடிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.