லால்குடியில் காலி இடங்களில் பூங்கா அமைக்க கோரிக்கை
லால்குடியில் காலி இடங்களில் பூங்கா அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
லால்குடி, ஜூன்.30-
லால்குடி நகராட்சி கூட்டம் அதன் தலைவர் துரைமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் சுகுணா ராஜ்மோகன், நகராட்சி கமிஷனர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில். லால்குடி நகராட்சியில் டிரைவர்கள் பணிக்கு அரசின் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடியாக நியமனம் செய்ய வேண்டும். நகராட்சிக்கு சொந்தமான காலி இடங்களில் பூங்கா அமைக்க வேண்டும். பழுதான தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும். தெருக்களில் ெதருப்பெயர் பலகை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.