இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி சமையல் கூடத்தை சீரமைக்க கோரிக்கை

ராமாபுரம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி சமையல் கூடத்தை சீரமைக்க கேரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-06-28 16:56 GMT

சோளிங்கர் அடுத்த செங்கல்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட ராமாபுரத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் முழுவதும் உடைந்து சேதம் அடைந்துள்ளது. கட்டிடத்தின் மேற் கூரை பகுதியில் சிமெண்டு பூச்சிகள் முழுவதுமாக உடைந்து சேதமடைந்துள்ளது. சமையல் செய்யும் பகுதியில் எலி, பாம்புகள் உள்ளே புகுந்து விடுகிறது. இதனால் சமையல் செய்பவர்கள் மிகவும் அச்சத்துடன் ஆபத்தான நிலையில் சமையல் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே சமையல் கூடத்தை புதுப்பித்து தர வேண்டும் என பலமுறை அதிகாரிக்கு தெரிவித்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த கட்டிடத்தை உடனே சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்