சாலையில் கிடக்கும் மண் குவியலை அகற்ற கோரிக்கை

பந்தலூர் அருகே சாலையில் கிடக்கும் மண் குவியலை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.;

Update: 2022-09-17 18:45 GMT

பந்தலூர், 

பந்தலூர் அருகே நெலாக்கோட்டையில் இருந்து ராக்வுட், கரியசோலை, தேவாலா டேன்டீ வழியாக தேவாலா பஜாருக்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் கூடலூரில் இருந்து தேவாலா, தேவர்சோலை, நெலாக்கோட்டை, கரியசோலைக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தொடர் மழை காரணமாக அந்த சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. சாலையில் கிடக்கும் மண் குவியல்கள் அகற்றப்பட வில்லை. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மண் சரிவால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடிவது இல்லை. எனவே, சாலையில் விழுந்த மண்ணை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்