ஈரோடு- நெல்லை ெரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க கோரிக்கை

ஈரோடு- நெல்லை ெரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.;

Update: 2023-07-26 18:45 GMT

பாவூர்சத்திரம்:

மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் அனந்த, ஆய்வு பணிக்காக நேற்று பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்துக்கு வந்தார். அங்கு அவரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், பாவூர்சத்திரம் ெரயில் நிலைய நடைமேடையை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவிற்கு நீட்டிக்க வேண்டும். நடைமேடை ஒன்றில் கூடுதலாக சிறிய மேற்கூரைகள் அமைக்க வேண்டும். நடைமேடையில் உள்ள பெயர் பலகைகளை புதுப்பிக்க வேண்டும். ெரயில் நிலைய வாசலில் மரங்கள் அடர்த்தியாக உள்ள பகுதியில் வெளிச்சம் இல்லாத நிலையில் கூடுதலாக மின்விளக்குகள் அமைக்க வேண்டும். ஈரோடு- நெல்லை ெரயிலை அம்பை, பாவூர்சத்திரம் வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும். நெல்லையில் காலியாக நிற்கும் பிலாஸ்பூர் ெரயில் பெட்டிகளை கொண்டு, பாவூர்சத்திரம் வழியாக நெல்லை பெங்களூருக்கு ெரயில் இயக்க வேண்டும். பாவூர்சத்திரம் ெரயில் நிலையத்தில் தனியாக முன்பதிவு அலுவலர் நியமனம் செய்ய வேண்டும். ெரயில் நிலையத்தின் வடபகுதியில் அமைந்துள்ள காலியிடங்களில் பூங்கா அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ெரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா, ம.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் ராமஉதயசூரியன் மற்றும் பொதுமக்கள் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் நெல்லை ரெயில் நிலையத்திலும் மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்