புதிய ரேஷன் கடை கட்ட கோரிக்கை

புதிய ரேஷன் கடை கட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-08-25 20:02 GMT

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே சுண்டங்குளம் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள ரேஷன் கடை சேதமடைந்து இடிந்து விழுந்து விட்டது. இதனால் அங்கன்வாடி கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகின்றது. சுண்டங்குளம், கண்மாய்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த கடையில் தான் பொருட்கள் வாங்குகின்றனர். இந்த இடம் குறுகலாக உள்ளதால் பொதுமக்கள் ரேஷன்பொருட்கள் வாங்குவதற்கு சிரமப்படுகின்றனர். இந்த கடையின் மூலம் 500 குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர். எனவே சுண்டங்குளம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்