இறைச்சி கூடத்துக்கு தடை விதிக்க கோரிக்கை
இறைச்சி கூடத்துக்கு தடை விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது;
சீர்காழி
சீர்காழியில் இந்து மக்கள் கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மணிகண்டன், செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில செயலாளர் சாமிநாதன் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். சீர்காழி சட்டமன்ற தொகுதியில் இந்து மக்கள் கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது. சீர்காழி நகர் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் இறைச்சி கூடத்துக்கு தடை விதிக்க வேண்டும். பள்ளி நேரங்களில் நகர் பகுதியில் கனரக வாகனங்களை இயக்குவதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் தனசேகரன், மாநில பார்வையாளர் சோலை கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.