மல்லாங்கிணற்றிலிருந்து மதுரைக்கு அரசு பஸ் இயக்கப்படுமா?

மல்லாங்கிணற்றிலிருந்து மதுரைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-13 18:45 GMT

காரியாபட்டி, மே.14-

மல்லாங்கிணற்றிலிருந்து மதுரைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மல்லாங்கிணறு

காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மல்லாங்கிணறு பேரூராட்சி என்பது விருதுநகருக்கும், காரியாபட்டிக்கும் இடையில் உள்ளது. மல்லாங்கிணற்றிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு மதுரைக்கு செல்ல வேண்டுமானால் காரியாபட்டி வந்துதான் வேறொரு பஸ் ஏறி செல்ல வேண்டும்.

மேலும் மல்லாங்கிணறு பகுதியில் அதிகமான காய்கறிகள் விளைந்து வருகிறது. இங்கு விளையும் காய்கறிகளை விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

மதுரைக்கு பஸ்

ஆனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. மதுரை காய்கறி மார்க்கெட்டிற்கு காய்கறிகளை கொண்டு சென்றால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

எனவே இதற்கு ஏதுவாக அதிகாலை நேரத்தில் மதுரைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு தான் மல்லாங்கிணற்றிலிருந்து பஸ் உள்ளது. இதனால் மதுரை செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மல்லாங்கிணற்றில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் விரைவாக மதுரை செல்ல மல்லாங்கிணற்றிலிருந்து புதிதாக வழித்தடத்தை உருவாக்கி அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்