தொழிலாளர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக அறிவித்ததை திரும்ப பெற வேண்டும் இடைநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை
தொழிலாளர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக அறிவித்ததை திரும்ப பெற வேண்டும் என இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது;
சிவகங்கை
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட கூட்டம் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும் மாவட்ட தலைவர் ரஞ்சித் குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நாகராஜன் வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் சிவகுமார், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் பீட்டர், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் முத்துசாமி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளருமான சங்கர் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை வாழ்த்தி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசினார்.
கூட்டத்தில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரம் வரை அதிகரிப்பதை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாவட்ட பொருளாளர் நரசிம்மன் நன்றி கூறினார்.