வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வேண்டும் என கலெக்டரிடம், ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2023-01-11 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை யூனியன் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸை நேரில் சந்தித்தனர். அப்போது திருவாடானை தாலுகாவில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து விட்டதால் சுமார் 26 ஆயிரத்து 500 நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் முழுமையாக கருகிவிட்டது. இதனால் திருவாடானை தாலுகாவை முழுமையாக ஆய்வு செய்து வறட்சி பகுதியாக அறிவிக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். திருவாடானை தாலுகாவில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய காலத்தில் பயிர் இன்சூரன்ஸ் தொகை கிடைத்திடவும், வறட்சி நிவாரண பணிகளை உடனடியாக தொடங்கிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட கலெக்டர் பயிர் பாதிப்பு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றார். அப்போது ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் தேளூர் ஐயப்பன், செயலாளர் வெள்ளையபுரம் பரக்கத் அலி, பொருளாளர் டி.நாகனிஇந்திரா ராஜேந்திரன், துணை செயலாளர் கூகுடி சரவணன், ஊராட்சி தலைவர்கள் பனஞ்சாயல் மோகன்ராஜ், மங்கலக்குடி அப்துல் ஹக்கீம், கலிய நகரி உம்முசலீமா நூருல் அமீன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்