கரூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் குடியரசு தினவிழா

கரூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் குடியரசு தினவிழா கொண்டாடாடப்பட்டது.;

Update: 2023-01-26 18:30 GMT

குடியரசு தினவிழா

குடியரசு தின விழாவை முன்னிட்டு தாந்தோணிமலையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடியை மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இதையடுத்து வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.கரூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதாகணேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில், துணை மேயர் தாரணி சரவணன், நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அரவக்குறிச்சி

அரவக்குறிச்சியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி சந்தோஷம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் வக்கீல்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

வேலாயுதம்பாளையம்-நொய்யல்

புகழூர் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் கோமதி, வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், புகழூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் முருகன், புகழூர் புகலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சித்தலைவர் சேகர் என்கிற குணசேகரன் ஆகியோர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செய்தனர். இதேபோல் புகழூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்