திருமால்பூரில் உடைந்த பாலம் சீரமைக்கும் பணி தீவிரம்

`தினத்தந்தி' செய்தி எதிரொலியாக திருமால்பூரில் உடைந்த பாலம் சீரமைக்கும் பணி தொடங்கியது.

Update: 2023-08-02 18:59 GMT

நெமிலியை அடுத்த திருமால்பூர் பகுதியில் காஞ்சீபுரம்- பனப்பாக்கம் செல்லும் சாலையில் அமைந்துள்ள பாலம் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது சேதமடைந்தது. இதனால் அந்த வழியாக பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிவந்தனர்.

இதுகுறித்து தினத்தந்தியில் படத்துடன் செய்திவெளியானது. இதன் எதிரொலியாக நேற்று மழையால் சேதமடைந்த பாலத்தை அப்புறப்படுத்தி புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றுபாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது.

செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்