அரசு பஸ்சின் பழுதடைந்த படிக்கட்டு சீரமைப்பு

அரசு பஸ்சின் பழுதடைந்த படிக்கட்டு சீரமைப்பு

Update: 2023-01-12 18:45 GMT

கூடலூர்

கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளையில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் பயணிகளுடன் செல்லும்போது அடிக்கடி நடுவழியில் நின்று பழுதடைந்து விடுகிறது.

இந்த நிலையில் கூடலூரில் இருந்து நம்பியார்குன்னுவுக்கு சென்ற அரசு பஸ்சின் பின்பக்க படிக்கட்டு மிகவும் பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் காணப்பட்டது. தொடர்ந்து நேற்று பந்தலூர் வழியாக மீண்டும் கூடலூருக்கு வந்து கொண்டிருந்தது. இதை கண்ட பயணிகள் மற்றும் பொதுமக்கள் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து போக்குவரத்து கழக மேலாளர் அருண் கண்ணன் உத்தரவின் பேரில் பழுதடைந்த படிக்கட்டுகள் உடனடியாக சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து பயணிகள் பயன்பாட்டுக்காக பஸ் மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் உடனடி நடவடிக்கை எடுத்த போக்குவரத்து துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இதேபோன்று மழைக்காலத்தில் பயணம் செய்ய முடியாத நிலையில் பஸ்கள் உள்ளது. அடுத்த மழைக்காலம் தொடங்குவதற்குள் சீரமைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்