ரெங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு

ரெங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றது.;

Update:2023-01-23 00:27 IST

திருவாய்மொழி பாசுரங்கள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 12-ந் தேதி நிறைவு பெற்றத்தை தொடர்ந்து, உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவம் 5 நாட்கள், ராப்பத்து உற்சவம் 5 நாட்கள் என 10 நாட்கள் நடைபெற்றது.

பகல்பத்து உற்சவ நாட்களில் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே இரண்டாயிரம் திருமொழி பாசுரங்களை தினமும் மாலையில் கேட்டருளினார். ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழித் திருநாள் கடந்த 18-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. ராப்பத்து உற்சவ நாட்களில் திருவாய்மொழித்திருநாள் மண்டபத்தில் தினமும் மாலை ரெங்கநாச்சியார் எழுந்தருளி திருவாய்மொழி பாசுரங்களை கேட்டருளினார்.

சாற்றுமறை கண்டருளினார்

ராப்பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று ரெங்கநாச்சியார் தங்ககிரீடம், வைரத்தோடு, பவளமாலை, அஷ்டலெட்சுமி பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு திருவாய்மொழி மண்டபத்தை வந்தடைந்தார். இரவு 8.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை சாற்றுமறை கண்டருளினார். பின்னர் அங்கிருந்து ரெங்கநாச்சியார் இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். நேற்றுடன் ெரங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்