ஆன்லைன் மூலம் தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்- இணை இயக்குனர் தகவல்

ஆன்லைன் மூலம் மட்டுமே தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சரவணன் தெரிவித்து உள்ளார்.;

Update: 2023-10-10 20:25 GMT

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பதிவுபெற்ற தொழிற்சாலைகளுக்கும் வருகிற 2024-ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தினை ஆன்லைன் மூலம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசிநாள் ஆகும். எனவே நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பதிவுபெற்ற தொழிற்சாலைகள் தங்களது உரிமத்தை புதுப்பிக்க https://dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

பதிவேற்றம் செய்யப்பட்ட உடனேயே தங்கள் தொழிற்சாலை சட்ட உரிமம் புதுப்பிக்கப்பட்டு அதை இணையவழி முறையிலேயே வழங்கப்படும். இதற்காக அலுவலகம் வர வேண்டிய அவசியம் இல்லை. உரிம திருத்தம், உரிம மாற்றம் ஆகியவற்றிற்கும் இணையவழி முறையில் விண்ணப்பித்து இணையவழியில் உரிம கட்டணத்தை செலுத்தி அதன் 3 நகல்கள் (படிவம் 2) மற்றும் இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது நகலை இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் உரிய காலத்தில் உரிம கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்