ஆபத்தான மின் கம்பிகளை அகற்ற வேண்டும்

ஆபத்தான மின் கம்பிகளை அகற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-11-17 18:20 GMT

கலவை பேரூராட்சியில் பஜார் வீதியில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில் உயர்ந்த மரங்கள் உள்ளன. அதன் அருகில் மின் வயர்களும், கம்பிகளும் செல்கின்றன. காற்று அடித்தால் ஒன்றோடு ஒன்று உராய்ந்து தீப்பொறிகள் விழுகிறது. இதனால் மின் கசிவு ஏற்பட்டு பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மரத்தின் மீதுள்ள மின் வயர்களை அகற்ற மின்வாரியத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்