அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்
சிங்கம்புணரி பகுதியில் அரசுக்கு சொந்தமான மற்றும் பொதுவான திறந்தவெளி பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டது;
சிங்கம்புணரி
சிங்கம்புணரி பகுதியில் அரசுக்கு சொந்தமான மற்றும் பொதுவான திறந்தவெளி பகுதிகளில் அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு வந்த நிலையில் அவற்றை அகற்றுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சிங்கம்புணரி பேரூராட்சி நிர்வாக ஊழியர்களுடன் சிங்கம்புணரி போலீசார் இணைந்து திண்டுக்கல்- காரைக்குடி சாலை, மேலூர் சாலை போன்ற பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றினர். பொது இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைக்க கூடாது, அவ்வாறு வைக்கப்பட்டால் போலீசார் உதவியுடன் பேரூராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தும் என பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் உத்தரவிடப்பட்டது.