மின்பாதையில் இடையூறாக இருந்த மரங்கள் அகற்றம்

திருவெண்காடு, பெருந்தோட்டம் பகுதியில் மின்பாதையில் இடையூறாக இருந்த மரங்கள் அகற்றப்பட்டன.;

Update:2023-10-06 00:15 IST

திருவெண்காடு:

சீர்காழி மின்வாரிய கோட்ட உதவி பொறியாளர் விஜய பாரதி மேற்பார்வையில் திருவெண்காடு உதவி பொறியாளர் ரமேஷ், ஆக்க முகவர் குணசேகரன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள் நேற்று திருவெண்காடு, சம்பா கட்டளை, வடபாதி, அம்பேத்கர் நகர், சின்ன பெருந்தோட்டம், அகர பெருந்தோட்டம், நாயக்கர் குப்பம் உள்ளிட்ட இடங்களில் மின் கம்பிகளுக்கு இடையூறாக காணப்படும் மரங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதோடு மட்டுமல்லாமல் சுமார் 50-க்கும் மேற்பட்ட பழுதடைந்த இன்சுலேட்டர்களை அகற்றிவிட்டு புதிய இன்சுலேட்டர்களை பொருத்தும் பணியிலும் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்