ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் கோர்ட்டு உத்தரவின் பேரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. அதன்படி பழுப்பேரி ஏரியின் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இரவு நேரமானதால் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.