சிவகிரி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சிவகிரி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.;
சிவகிரி:
சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரியில் உள்ள தனியார் உயர்நிலைப்பள்ளிக்கு மேற்கு பகுதியில் இருந்து சிவகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கொத்தாடப்பட்டி பகுதி வரை அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலம் மீட்கப்பட்டது. சிவகிரி தாசில்தார் ஆனந்த் தலைமையில் வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வள்ளிமயில், ஊர் நல அலுவலர் தெய்வானை ஆகியோர் முன்னிலையில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் மண்டல துணை தாசில்தார் வெங்கடசேகர், சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சங்கரவடிவு, உதவியாளர் வேல்முருகன், சர்வேயர் பாண்டிச்செல்வி, விஸ்வநாதப்பேரி ஊராட்சி தலைவர் ஜோதி, துணைத்தலைவர் காளீஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.