கள்ளக்குறிச்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கள்ளக்குறிச்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2023-03-12 18:45 GMT

கள்ளக்குறிச்சி நகராட்சி பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள பழைய மாரியம்மன் கோவில் தெருவில் குடியிருப்பு வாசிகள் மற்றும் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், இருசக்கர, ஆட்டோ போன்ற வாகனங்களில் சென்று வருவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்திருந்தனர். இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் குமரன் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் பழைய மாரியம்மன் கோவில் தெருவில் குடியிருப்பு வாசிகள் மற்றும் கடை உரிமையாளர்களால் ஆக்கிரமிப்பு செய்து கழிவுநீர் வாய்க்கால் மீது கட்டப்பட்டுள்ள வீட்டின் படிக்கட்டுகள் மற்றும் சாய் தளங்களை அகற்றினர். இனி அந்த பகுதியில் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் வாய்க்கால் மீது படிக்கட்டுகள், சாய்தளங்கள் அமைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் குமரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்