ஆக்கிரமிப்பு கடை அகற்றம்

பந்தலூர் அருகே ஆக்கிரமிப்பு கடை அகற்றப்பட்டது.;

Update:2023-10-20 00:15 IST

பந்தலூர் அருகே நம்பியார்குன்னு பகுதியில் அனுமதி இன்றி ஒருவர் பெட்டிக்கடை வைத்து நடத்துவதாகவும், அதை அகற்ற வேண்டும் என்று நெலாக்கோட்டை ஊராட்சியில் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து நெலாக்கோட்டை ஊராட்சி தலைவர் டெர்மிளா பன்னீர்செல்வம், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் ஆக்கிரமிப்பு கடையை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்