போக்குவரத்திற்கு இடையூறான பேனர்கள் அகற்றம்
போக்குவரத்திற்கு இடையூறான பேனர்கள் அகற்றம்;
தொண்டி
தொண்டி பேரூராட்சியில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், வட்டானம் விலக்கு சாலை பாவோடி மைதானம் பகுதியில் போக்குவரத்து மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள், பதாதைகளை பேரூராட்சித்தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிக்கான் உத்தரவின் பேரில் செயல் அலுவலர் மகாலிங்கம் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் ராமர், தொண்டி வருவாய் ஆய்வாளர் குமார், கிராம நிர்வாக அலுவலர் ராதா மற்றும் வருவாய்த் துறையினர், போலீசார் முன்னிலையில் அகற்றப்பட்டது.