ஆலங்குடியில் விளம்பர பதாகைகள் அகற்றம்
ஆலங்குடியில் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது.
கோவையில் பேனர் பொருத்தும் போது, 60 அடி உயர இரும்பு தூண்கள் உடைந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இதன் எதிரொலியாக ஆலங்குடியில் அதிகமான விளம்பர பதாகைகள் வைத்திருப்பாக தகவல் வந்ததையடுத்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் (திருச்சி மண்டலம்) காளியப்பன் ஆகியோர் ஆலங்குடியில் உள்ள அனைத்து பதாகைளை அகற்ற செயல் அலுவலர் பாலசுப்ரமணியன் மற்றும் தலைவர் ராசி முருகானந்தம் ஆகியோருக்கு உத்தரவிட்டனர். அதன்படி பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் காமராஜர் சிலை, பஸ் நிறுத்தம், அரசமரம், வடகாடு முக்கம், பாத்தம்பட்டி முக்கம், சந்தப்பேட்டை மற்றும் சில இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது.