விளையாட்டு திடலில் ஆக்கிரமிப்பு செய்த 5 வீடுகள் அகற்றம்
விளையாட்டு திடலில் ஆக்கிரமிப்பு செய்த 5 வீடுகள் அகற்றப்பட்டன.;
சேத்துப்பட்டு
விளையாட்டு திடலில் ஆக்கிரமிப்பு செய்த 5 வீடுகள் அகற்றப்பட்டன.
சேத்துப்பட்டு தாலுகா மடம் கிராமத்தில் ஒரு சமூகத்தினருக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் இருந்தது. அந்த மைதானத்தின் இடத்தை ரத்தினவேல், நாராயணன், கிருஷ்ணன், ரவி, கோபால் ஆகிேயார் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வந்தனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ளும்படி சம்பந்தப்பட்டவர்களிடம் கூறியிருந்தனர்.
அது குறித்து கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினருக்கு உத்தரவு வந்தது.
அதன்பேரில் சேத்துப்பட்டு தாசில்தார் பாலமுருகன், தனி தாசில்தார் முருகானந்தம் மற்றும் செய்யாறு, வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்தனர். தீயணைப்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன.