ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்

சீர்காழி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.;

Update: 2022-12-04 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

பேட்டி

சீர்காழி பகுதிகளில் கடந்த மாதம் பெய்த கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.பார்வையிட்டு ஆய்வு ெசய்தார். இதை தொடர்ந்து சீர்காழி தாடாளன் பெரியபள்ளிவாசல் தெருவில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பார்வையிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

ரூ.30 ஆயிரம் நிவாரணம்

சீர்காழி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். தற்போது பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பயிர்க்காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.த.மு.மு.க. சார்பில் சென்னை உள்ளிட்ட மாவட்டத் தலைநகரங்களில், வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தி நாளை(செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். காசியில் தமிழ் சங்கம விழாவிற்கு தமிழகத்தை சேர்ந்த பிரபல தமிழறிஞர்கள் யாரையும் அழைக்கப்படவில்லை.

ஆக்கிரமிப்பு

திருக்குறளை 12 மொழிகளில் மொழி பெயர்த்த அறிஞர்களையும் கூட இந்த விழாவில் கவுரவிக்கப்படவில்லை. காசியில் தமிழகத்தின் பல்வேறு மடங்களைச் சேர்ந்த இடங்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீண்ட காலமாக உத்தரபிரதேசத்தில் திருவள்ளுவர் சிலையை திறக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்