விழுப்புரத்தில் விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்-அமைச்சர் அறிவிப்பு

விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-02-24 16:30 GMT

சென்னை,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கப்பை கிராமத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கப்பை கிராமத்தில் இன்று (24.02.2024) அதிகாலை யுவராஜ் என்பவர் தன் குடும்பத்தாருடன் தனது சொந்த ஆட்டோவில் சென்னையிலிருந்து திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி சாலையோர தடுப்புச் சுவற்றில் மோதி அருகிலிருந்த தரைக் கிணற்றில் விழுந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த யுவராஜ் என்பவரின் இரு மகன்கள் பிரதீஷ் (வயது 9) மற்றும் ஹரிபிரசாத் (வயது 8) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது பெற்றோருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்."

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்