10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும்

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முத்துப்பேட்டையில், திருமாவளவன் எம்.பி. கூறினார்.

Update: 2022-06-07 18:11 GMT

முத்துப்பேட்டை,

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முத்துப்பேட்டையில், திருமாவளவன் எம்.பி. கூறினார்.

மின்சாரம் தாக்கி சாவு

முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 14- ந் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு டிஜிட்டல் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி அதே பகுதியை சேர்ந்த கட்சி பிரமுகர் சின்னதுரை உயிரிழந்தார். 4 பேர் காயம் அடைந்தனர். இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நேற்று சின்னத்துரை வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறி ரூ.2 லட்சம் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது

விடுதலை

திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கியுள்ள ஈழத்தமிழர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சினையில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். சிறப்பு முகாம்களை உடனடியாக கலைக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை கட்டணத்தில் சில இடங்களில் கட்டணமில்லாத வகையில் மின்சாரம் வினியோகிக்கபட்டு வருகிறது.

நடவடிக்கை

மின்சாரம் மற்றும் நிலக்கரி தட்டுப்பாடுக்கு மத்திய அரசுதான் முழுபொறுப்பேற்க வேண்டும். முத்துப்பேட்டை ஒன்றியத்தில் கடந்த ஆட்சியின் போது அரசு வீடுகட்டும் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக உரிய ஆதாரங்களை திரட்டி தமிழக முதல்- அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட பொருளாளர் வெற்றி, ஒன்றிய செயலாளர் ஈழராஜா, மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்