வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழக தேர்தல் ஆணையம், உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த, முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது. அந்தவகையில், அன்னவாசல் ஒன்றியம் வெட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்த சவரிமுத்து என்பவர் உடல் நலக்குறைவால் இறந்து விட்டதால், அப்பதவியிடம் காலியாக இருந்தது. காலியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தலை நடத்த முதற்கட்டமாக, வரைவு வாக்காளர் பட்டியல், அன்னவாசல் ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமாவதி, ஆனந்தன் ஆகியோர் வெளியிட்டனர். இந்த வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பெற்றுக்கொண்டனர். இதில் அலுவலக மேலாளர் கணேசன் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்