இறந்த கைதியின் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக உறவினர்கள் போராட்டம்

பாளையங்கோட்டை சிறையில் இறந்த விசாரணை கைதியின் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-06-16 18:45 GMT

தென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலைய பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் தங்கச்சாமி (வயது 26). இவரை சட்டவிரோதமாக மது விற்றதாக கூறி, புளியங்குடி போலீசார் கடந்த 11-ந்தேதி கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி சிறையில் தங்கச்சாமி திடீரென்று மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே தங்கச்சாமியின் இறப்புக்கு நீதி கேட்டு, அவருடைய உறவினர்கள் புளியங்குடியில் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் தங்கச்சாமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3-வது நாளாகவும் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்