ஒப்பந்த ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

மணப்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்தில் இறந்த ஒப்பந்த ஊழியரின் உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-01 19:22 GMT

மணப்பாறை,

மணப்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்தில் இறந்த ஒப்பந்த ஊழியரின் உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒப்பந்த ஊழியர்

மணப்பாறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தவர் கலையரசன். மறவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கொசு ஒழிப்பு பணியாளராக பணியாற்றிவந்த அவர் கடந்த 26-ந்தேதி மணப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில் மருந்து, மாத்திரைகளை, தீ வைத்து எரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது அவரின் சட்டையில் திடீரென தீ பற்றி உள்ளது. இதை அடுத்து அவரை அங்குள்ள ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 60 விழுக்காட்டிற்கு மேல் தீக்காயங்கள் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போராட்டம்

அவருடைய இறப்புக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், வாரிசுக்கு வேலை வழங்கக்கோரியும் அவருடைய உறவினர்கள் உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து நேற்று மதியம் உடலை வாங்கிச்சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்