வாலிபரை தாக்கிய உறவினர் கைது
வாலிபரை தாக்கிய உறவினர் கைது செய்யப்பட்டார்.;
வடமதுரை தெற்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 19). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான பாலமுருகன் (41) என்பவருக்கும் சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பாலமுருகன், சுரேஷ்குமாரிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் மூட்டை தூக்கும் இரும்பு கொக்கியால் சுரேஷ்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதில் காயமடைந்த சுரேஷ்குமார் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சுரேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார்.