வலுதூக்கும் போட்டி
பாளையங்கோட்டையில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி தொடங்கியது.;
நெல்லை மாவட்ட பவர் லிப்டிங் அசோசியேசன் சார்பில் தமிழ்நாடு அளவிலான 24-வது சப்-ஜூனியர், 40-வது ஜூனியர், 50-வது சீனியர் வலுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகள் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் அனிதா, முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியன், டாக்டர் மாணிக்கவாசகம், ராமகிருஷ்ணன் என்ற அன்பு, தேசிய வலுதூக்கும் நடுவர் வளர்மதி முத்தையா ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வலு தூக்கினார்கள்.
தொடக்க விழாவில் நெல்லை மாவட்ட தலைவர் சிவராமன், செயலாளர் சண்முகசுந்தரம், இந்திய ெரயில்வே வலுதூக்கும் வீரர்கள் மகேந்திரன், மகேஷ், அழகுராஜா, துணைத் தலைவர் முத்துபாண்டியன், நிர்வாகிகள் நவநீதகிருஷ்ணன், பாலாஜி, கண்ணன், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.