தீயணைப்புத்துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி
ராயக்கோட்டை அருகே தீயணைப்புத்துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.;
ராயக்கோட்டை:
ராயக்கோட்டையில் தீயணைப்புத்துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மழை, வெள்ள காலங்களில், நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ள இடங்களில் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து ராமாபுரத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் மற்றும் ஒத்திகை செய்து காண்பித்தனர். இதை மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.