சொத்து பட்டியல் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் தான் பதில் சொல்ல வேண்டும்

சொத்து பட்டியல் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் தான் பதில் சொல்ல வேண்டும்;

Update:2023-04-15 01:16 IST

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்து பட்டியல் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் தான் பதில் அளிக்க வேண்டும் என தஞ்சையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

பேட்டி

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி தஞ்சையில் அவரது உருவ படத்துக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்து பட்டியல், குற்றச்சாட்டு உண்மையா? இல்லையா? என்பது குறித்து தமிழக அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் தான் பதில் சொல்ல வேண்டும். அ.தி.மு.க.வினர் ஊழல் பட்டியலை ஏன் வெளியிடவில்லை? என அண்ணாமலையிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து இந்த ஆண்டு இறுதியில் முடிவு எடுக்கப்படும்.

மாநாடு

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு சிறந்த புத்தாண்டாக பிறக்கும். திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் மாநாடு நடத்துவது குறித்து ஊடகங்கள் வாயிலாகத்தான் நான் தெரிந்து கொண்டேன். நான் கடந்த 10 நாட்களாக தஞ்சையில் தான் தங்கியிருக்கிறேன்.

இங்கிருந்து தான் வெளியூர்களுக்கு சென்று வருகிறேன். என்னை மாநாட்டிற்கு அழைப்பார்களா? இல்லையா? என்று எனக்கு எப்படி தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்