அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்துவிழிப்புணர்வு பிரசாரம்
அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பிரசார தொடக்க விழா கம்பத்தில் நடந்தது.;
அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பிரசார தொடக்க விழா கம்பத்தில் நடந்தது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாரதராணி முன்னிலை வகித்தார். கம்பம் நகராட்சி சுங்கம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உவரி அந்தோணியம்மாள், ஆலமரத்தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை முருகவேணி, ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பிரசாரத்தின்போது, நம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் நமது எதிர்காலத்தை திட்டமிடுவோம் மற்றும் அரசு பள்ளியின் சிறப்பு அம்சங்களான, ஆடல், பாடல், விளையாட்டு செயல்பாடுகள் வாயிலாக பாடங்களை கற்றுக் கொள்ளும் எண்ணும் எழுத்தும் திட்டம், முதல்வரின் காலை உணவு திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் தொழிற்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு, இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.